திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அடையாற்றில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்கேன் சென்டர், நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்டவற்றில் கடந்த 5-ம் தேதி வருமானவரித்துறையினர் சோதனையைத் தொடங்கினர். இன்று 5-வது நாளாகத் தொடர் சோதனை நடைபெற்று வருகின்றது.
இதனிடையே, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவமனையில் உள்ள மார்ச்சுவரியில் மூட்டை மூட்டையாக 19 மூட்டைகள் பணம் எடுத்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் உலா வருகிறது.
இதனிடையே, வருமானவரித்துறையினர் உடன் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இணைந்து சோதனை நடத்தி வருவதாக மேலும் ஒரு தகவல் உலா வருகிறது.
இதனிடையே, ஜெகத்ரட்சகன் வீட்டில் அதிகாரிகள் தொடர் சோதனை செய்து வருவதை, திமுகவினரும், ஜெகத் ஆதரவாளர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அதிகாரிகள் சீக்கிரம் சோதனையை முடிக்க வேண்டும் இல்லையெனில் விளைவுகளைச் சந்திக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜெகத் ஆதரவாளர்கள் பேசிய மிரட்டல் விடுத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்த சென்ற வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக எழுந்த புகாரில், திமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.