வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. இந்த கட்சிக்கு தற்போது கோவை மற்றும் மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. நேற்று, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், திமுக தலைவரும், முதல்வருமான ல்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது, வரும் தேர்தல் குறித்தும், கூட்டணி தொடர்பாகப் பேசியதாகத் தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் எனத் தெரிவித்தார்.
ஒவ்வொரு தொகுதிகளிலும் பல கோடி ரூபாய் தொகையை வாரி இறைத்துத் தேர்தலில் வெற்றி பெற திமுக துடிதுடித்து வருகிறது. இதற்கு ஏற்படத் தனது கட்சி வேட்பாளர்களைத் தயார் செய்து வருகிறது.
ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களிடம் தேர்தலுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்யும் வகையில் பெரிய தொகை இல்லை. திமுகதான் அவர்களுக்குக் கடந்த தேர்தலில் தொகுதிக்கு 25 கோடி ரூபாய் கொடுத்ததாகத் தகவல் வெளியானது.
இந்த முறை கூடுதல் தொகுதி கொடுத்தால், தொகையையும் கூடுதலாகக் கொடுக்க வேண்டும். இதை திமுக தலைமையில் உள்ளவர்கள் விரும்பவில்லை. ஏற்கனவே, கொடுத்த 2 தொகுதி அல்லது ஒரு தொகுதி போதும் என திமுக முடிவு செய்துள்ளதாம்.
இதனால், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கூட்டணியில் பிரிவு ஏற்பட்டாலும் ஏற்படலாம் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.