விராட் கோலிக்கு சிறந்த பிசிசிஐ சிறந்த பீல்டர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, மிட்செல் மார்ஷ் அடித்த பந்தை ஒரு விநாடி கூட யோசிக்காமல் பாய்ந்து, டைவ் அடித்து பந்தை பிடித்தார்.
இதுவரை உலகக்கோப்பையில் இந்தியா சார்பில் விக்கெட் கீப்பர் அல்லாதவர்களில் அதிக கேட்ச் பிடித்தவர் அனில் கும்ப்ளே. அவர் 14 கேட்ச்களை பிடித்து இருந்தார். இந்த கேட்ச் மூலம் அணில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து விராட் கோலி முதலிடம் பிடித்தார்.
கோலியின் அபாரமான பீல்டிங்கால் இரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். போட்டி முடிந்ததும் கோலிக்கு பிசிசிஐ சிறந்த பீல்டர் விருது வழங்கி, தங்க பதக்கமும் கொடுத்து கௌரவித்தது. பதக்கம் பெற்ற கோலி உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.