அடடே… சிக்ஸ் போய்விட்டதே… என்று சிக்ஸ் அடித்ததற்கு வருத்தப்பட்ட கே.எல்.ராகுல்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலானப் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
கே.எல். ராகுல் 97 ரன்கள் அடித்தார், இருப்பினும் அவரால் சதம் அடிக்க முடியாமல் போனது. அவர் 91 ரன்கள் இருக்கும்போது, இந்தியாவின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. மேலும் அவர் சதம் அடிக்க 9 ரன்கள் தேவைப்பட்டது.
41-வது ஓவரை ஆஸ்திரேலியா அணியின் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் முதலில் ஒரு பவுண்டரி அடிக்க வேண்டும். ஸ்கோர் சமன் ஆகிவிடும். அதன்பின் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிப் பெற வைக்கவேண்டும் என்ற நிலை இருந்தது.
ஆனால், ராகுல் 2-வது பந்தை ஆஃப் சைடு தூக்கி அடித்தார். பந்து பவுண்டரிக்கு போகும் என நினைத்தார். ஆனால், லைனை தாண்டி சிக்ஸ் சென்று விட்டது. இந்தியா 201 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. கே.எல். ராகுல் 97 ரன்கள் எடுத்தார்.
சிக்ஸ் சென்றதும், அடடே… சிக்ஸ் போய்விட்டதே… என கவலையில் அப்படியே உட்கார்ந்தார். அதன்பின் ஹர்திக் பாண்டியா உடன் வெற்றியை பகிர்ந்து கொண்டார்.
இந்தியா 2 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்த நிலையில், கே.எல். ராகுல்- விராட் கோலி ஜோடி அபாரமான விளையாடியது குறிப்பிடத்தக்கது.