லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
நாராயணன் இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்த லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் மேற்கொண்ட முயற்சிகளை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் மோடி, அவரது தன்னலமற்ற சேவை மனப்பான்மை நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“முழுப் புரட்சியின் தந்தையான லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளில் அவருக்குத் தலைவணங்குகிறேன். அவர் தனது வாழ்நாள் முழுவதும் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தப் பாடுபட்டார். அவரது தன்னலமற்ற சேவை நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும், எனத் தெரிவித்துள்ளார்.