சாதிய ஒடுக்கு முறைகளை ஒழிக்க வேண்டும் !- தத்தாத்ரேயா ஹொசபலே.
Mar 19, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாதிய ஒடுக்கு முறைகளை ஒழிக்க வேண்டும் !- தத்தாத்ரேயா ஹொசபலே.

அனைத்து இந்து கோவிலிலும் அனைவருக்கும் நுழைய உரிமை உண்டு!

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாதிய பாகுபாடு இந்து சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே, தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், வதோதராவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே, ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் ஜாதி பாகுபாட்டை அகற்ற வேண்டும் என தெரிவித்தார்.

அனைத்து இந்து கோவிலிலும் அனைவருக்கும் நுழைய உரிமை உண்டு. அனைத்து நீர் ஆதாரத்திலிருந்தும் தண்ணீர் எடுக்க அனைவருக்கும் உரிமை உண்டு. சாதி பாகுபாட்டின் பெயரால் இத்தகைய பாகுபாடுகளை நாம் சகித்துக் கொள்ளக்கூடாது, ஏனெனில் அது ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கும், சாதிய பாகுபாடு என்பது அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இத்தகைய நடைமுறைகளை நாம் ஒழிக்க வேண்டும்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு பதக்கங்களை வென்ற போது அவர்களின் சாதி அல்லது மதத்தைப் பற்றி யாரும் கேட்கவில்லை.

மேலும் கோவிட்-19 ஊரடங்கின் காலத்தில் சாதி பாகுபாட்டை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் மக்கள் உதவினார்கள்.

அதேபோல், சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளின் சாதி மற்றும் மதத்தைப் பற்றி மக்கள் விசாரிக்கவில்லை. நெருக்கடியின் போதும் அல்லது வெற்றியின் போதும் நம் நாடு ஒற்றுமையாக இருப்பதையே இது காட்டுகிறது.

இந்த ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு உணர்வு நெருக்கடி அல்லது வெற்றியின் போது மட்டுமல்லாமல் எல்லா நேரத்திலும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சிலர், சனாதன தர்மத்தை அழிப்பதாக கூறி மேடையில் மிரட்டுகிறார்கள். இந்துக்களை பற்றி பேசுவதால் ஆர்எஸ்எஸ் இந்துக்களுக்கான இயக்கம் போல சித்தரிக்க பார்க்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.

சனாதன தர்மம் என்பது சடங்குகள்  பற்றியது அல்ல. அது இறை வழிபாட்டு முறைகளை பற்றியது. அது மனிதர்களிடத்தில் கடவுளை காண்பது. நல்ல நடத்தை மற்றும் சமூகத்தின் நலனை அடைவதற்கான வழிமுறைகளை கொண்டது என்று கூறினார்.

Tags: RSSDattatreya Hosabale General Secretary of the Rashtriya Swayamsevak Sangh
ShareTweetSendShare
Previous Post

மாமல்லபுரம்: பஞ்சபாண்டவர் மண்டபத்தில் விரிசல் – அதிகாரிகள் ஆய்வு!

Next Post

பின்தங்கிய இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு சான்றிதழ்  படிப்புக்கான ஒப்பந்தம்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies