இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே உச்சக் கட்ட போர் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தாங்கள் எப்படியாவது ஊர் திரும்பிவிட வேண்டும் என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உள்ளனர்.
காரணம், ஹமாஸ் தீவிரவாதிகள் பிடியில் உள்ள காசா நகரத்தை இஸ்ரேல் நாலா திசைகளிலிருந்தும் குண்டு மழை பொழிந்து தாக்கி அழித்து வருகிறது. இதனால், அங்குள்ள மக்களில் பலர் போரில் பலியாகி வருகின்றனர். தெருவெங்கும் மரண ஓலங்கள். திரும்பிய திசை எல்லாம் வானுர்ந்த கட்டிடங்கள் சீர்குலைந்து கிடக்கிறது. மருத்துவமனையில் மக்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள்.
இதனால், இஸ்ரேலுக்குச் சற்றும் சளைக்காமல் ஹமாஸ் தீவிரவாதிகள் படையும் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் பகுதியில் உள்ள அப்பாவி பொது மக்களும் உயிரிழந்து வருகின்றனர்.
புனித ஜெருசலேத்தைக் காணவும், சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக இஸ்ரேல் சென்றுள்ளவர்கள், வெளியே நடமுடியாமல் தாங்கள் தங்கியுள்ள பகுதிகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.
எப்படியாவது தாயகம் திரும்பிவிட வேண்டும் எனக் கடவுளிடம் வேண்டிக் கொண்டனர். போர் காரணமாக, விமானச் சேவையை ரத்து செய்திருந்த பாரதம் தற்போது, நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற ஆபரேஷன் அஜய் என்ற ஒரு அற்புதமான திட்டத்தையும், சிறப்பு விமானத்தையும் இயக்கியது.
இதில், இஸ்ரேலிலிருந்து முதற்கட்டமாக மீட்டக்கப்பட்ட 212 பேர் டெல்லி வந்தனர். அதில் 21 பேர் தமிழர்கள். டெல்லியிலிருந்து அவர்கள் அனைவரும் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். இதில் 14 பேர் சென்னை, 7 பேர் கோவையைச் சேர்ந்தவர்கள்.
இதனிடையே, இஸ்ரேலில் இருந்து 2-ம் கட்டமாக 235 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி திரும்பினர். இதில், 29 பேர் தமிழர்கள் என்பது கூடுதல் தகவல்.
தாங்கள் உயிர் பிழைப்போமா என இஸ்ரேலிலிருந்த நிலையில், பாரத பிரமதர் மோடி எங்கள் உடலில் தூசி கூடப்படாமல், காப்பாற்றியுள்ளார். எனவே, எங்கள் உயிர் உள்ளவரை மோடியை மறக்க மாட்டோம் எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.