பாகிஸ்தான் அளித்த உதவியை ஏற்க மறுத்த தலிபான் அரசு - காரணம் என்ன ?
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் அளித்த உதவியை ஏற்க மறுத்த தலிபான் அரசு – காரணம் என்ன ?

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் அளித்த உதவியை தலிபான் அரசு ஏற்க மறுத்துள்ளது.

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 14, 2023, 12:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பல்வேறு கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் தான். அங்கு மீட்புப்பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஆப்கானிஸ்தானில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற அங்கு ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே உள்ளது.

பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுமாறு உலக நாடுகளை தலிபான் அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு குழுக்களை அனுப்பி வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு உறுதியளித்து உள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அன்வாருல் ஹக்கக்கர் அத்தியாவசிய உதவிகளுடன் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதாக அறிவித்தார். அவர்கள் காபூல் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய அனுமதி வழங்க மறுக்கப்பட்டது. சரக்கு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் செல்ல தலிபான் அரசு அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து இரு நாட்டு தரப்பில் இருந்தும் அதிகார பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவும் பதற்றம்தான் பாகிஸ்தானின் உதவியை தலிபான் அரசு நிராகரித்ததற்கு முக்கியக் காரணம் என்று தெரிகிறது.

சட்ட விரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த அனைவரையும் நாடு கடத்துவது, ஆப்கானியர்களுக்கான விசா கொள்கை மற்றும் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் சிக்கலாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistanafganistantaiban
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேலிலிருந்து 21 தமிழர்களைக் காப்பாற்றிய மோடி

Next Post

இந்தியா – பாகிஸ்தான் : வரலாறு தொடருமா ?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies