இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து பரிசு கொடுத்தார்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார்.
பிரக்ஞானந்தாவை வீட்டிற்கு சென்ற சோமநாத், பிரக்ஞானந்தா வாங்கிய விருதுகளையும், பதக்கங்களையும் பார்த்து அவற்றைப் பற்றிக் கேட்டறிந்தார். பின்னர் இஸ்ரோ தலைவர் சோமநாத் பிரக்ஞானந்தாவுக்கு ஜிஎஸ்எல்வி ( GSLV ) ராக்கெட்டின் மாதிரியை பரிசாக கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோமநாத், தான் பிரக்ஞானந்தாவை சாதித்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகவும், இப்போது உலகளவில் 15 வது இடத்தில் இருக்கும் பிரக்ஞானந்தா விரைவில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரராக வருவார் என்றும் நம்பீக்கை தெரிவித்தார்.
மேலும் அவர் தரையில் இருப்பது பிரக்ஞானந்தா மற்றும் நிலவில் இருக்கிறது பிரக்யான் என்று கூறி பிரக்யான் எங்களுக்கு சின்ன குழந்தை போன்று அதுபோலவே தான் பிரக்ஞானந்தாவும் என்றார்.
மேலும் அவர், செஸ் என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான விளையாட்டு. இதை விளையாட பெரிய அளவு புத்திசாலித்தனம், திட்டமிடுதல் வேண்டும், இவை அனைத்தும் கொண்ட உருவமாக தான் பிரக்ஞானந்தா இருக்கிறார். இந்திய விண்வெளியை மேம்படுத்த பிரக்ஞானந்தா எங்களோடு இனைந்து பணியாற்றப் போகிறார் என்றும் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவை ஒரு சக்தி வாய்ந்த நாடக மாற்ற இளைஞர்களை ஊக்குவிப்பதிலும் எங்களோடு இனைந்து செயல்படுவார் என்றும் கூறியுள்ளார்.
அடுத்ததாக செய்தியாளர்களை சந்தித்த பிரக்ஞானந்தா, சோம்நாத் ஐயா என் வீட்டிற்கு வந்து என்னை சந்தித்ததை நினைத்தால் பெருமையாக உள்ளது. சந்திரயான் 3 பூமியில் இருந்து ஏவப்பட்டதும், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவதையும் நேரலையில் கண்டேன். மேலும் சோம்நாத் அவர்கள் என்னுடைய செஸ் பயணத்தை பற்றி கேட்டறிந்தார். மேலும் அவர் என்னை திருவனந்தபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார், நானும் அங்கு செல்வதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன், நிச்சயம் ஒரு நாள் நான் அங்கு செல்வேன் ” என்று கூறினார்.