உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு! - நாளைத் தொடக்கம்!
Oct 5, 2025, 08:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு! – நாளைத் தொடக்கம்!

'அமிர்த கால தொலைநோக்கு-2047' - இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான நீண்ட காலத் திட்டத்தைப் பிரதமர் மோடி வெளியிடவிருக்கிறார்.

Web Desk by Web Desk
Oct 16, 2023, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி ரூ.23,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நாளை அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் மூன்றாவது பகுதியைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10:30 மணிக்குக் காணொலி காட்சி மூலம்  தொடங்கி வைக்கிறார். மும்பையில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் அக்டோபர் 17 முதல் 19 வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது, இந்திய கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கு நீண்டகாலத் திட்டமான ‘அமிர்தகாலத் தொலைநோக்கு-2047’-ஐப் பிரதமர் வெளியிடுவார்.

துறைமுக வசதிகளை மேம்படுத்துதல், நீடித்த நடைமுறைகளை ஊக்குவித்தல், சர்வதேச ஒத்துழைப்பை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட உத்திசார்ந்த முன்முயற்சிகளை இந்தத் திட்டம் சுட்டிக்காட்டுகிறது.

இந்த எதிர்காலத் திட்டத்திற்கு ஏற்ப, இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான ‘அமிர்தகாலத் தொலைநோக்கு 2047’ உடன் ரூ.23,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

குஜராத்தில் உள்ள தீன்தயாள் துறைமுக ஆணையத்தில் ரூ.4,500 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படவுள்ள துனா தெக்ரா அனைத்துப் பருவநிலைக்கும் உகந்த ஆழமான முனையத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த அதிநவீன பசுமை முனையம் அரசு – தனியார் நிறுவனக் கூட்டாண்மை முறையில் உருவாக்கப்படும். சர்வதேச வர்த்தக மையமாக உருவெடுக்கும் இந்த முனையம்,  இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்  வழியாக  இந்திய வர்த்தகத்திற்கான நுழைவாயிலாக செயல்படும்.

கடல்சார் துறையில் உலகளாவிய மற்றும் தேசியக் கூட்டாண்மைக்காக ரூ. 7 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்புடைய 300-க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பிரதமர் மோடி இந்தத் திட்டத்தின்போது அர்ப்பணிப்பார்.

இந்த உச்சிமாநாடு, நாட்டின் மிகப்பெரிய கடல்சார் நிகழ்வாகும். இதில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் பிம்ஸ்டெக் பிராந்தியம் உட்பட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி உலகெங்கிலும் உள்ள அமைச்சர்கள் பங்கேற்பார்கள்.

இந்த மாநாட்டில்  உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள், வணிகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், அதிகாரிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் கலந்து கொள்வார்கள். மேலும், இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் இதரப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

மூன்று நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், எதிர்காலத் துறைமுகங்கள் உட்பட, கடல்சார் துறையின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கரியமிலவாயு குறைத்தல்;  கடலோரக் கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்து;  கப்பல் கட்டுதல்;  பழுதுபார்த்தல் மற்றும் மறுசுழற்சி;  நிதி, காப்பீடு மற்றும் நடுவர் மன்றம்; கடல்சார் குழுமங்கள்; கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம்; கடல்சார் பாதுகாப்பு; மற்றும் கடல்சார் சுற்றுலா போன்றவை அடங்கும். நாட்டின் கடல்சார் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறந்த தளத்தையும் இந்த உச்சிமாநாடு அளிக்கும்.

முதலாவது கடல்சார் இந்தியா உச்சிமாநாடு 2016 ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்றது. இரண்டாவது கடல்சார் உச்சி மாநாடு 2021 ஆம் ஆண்டில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது என்பது  குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் !

Next Post

 ஜம்மு-காஷ்மீரின் ஷெரேபியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நிறைவு!

Related News

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

உலகின் மிக உயரமான பகுதியில் சாலை – எல்லை சாலைகள் அமைப்பு சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies