சென்னிமலை அருகே உள்ளது கத்தக்கொடிக்காடு. இந்த இடத்தில் கடந்த 17-ம் தேதி இரு தரப்பினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
இதில், கிறிஸ்தவ மத போதகர் ஜான்பீட்டர் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சென்னிமலை காவல்துறையினர் அந்த ஊரில் உள்ள சிலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 2 பேரைக் கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
இந்த நிலையில், ஜான் பீட்டரைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கிறிஸ்தவ முன்னணி சார்பில், கடந்த 25-ம் தேதி சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒரு கட்டத்தில், இந்து விரோத அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட கிறிஸ்துவ மிஷினரிகள் கூட்டம் போட்டு, சென்னிமலையை ஏசு மலையாக்குவோம் எனக் கொக்கரித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் மத மோதலைத் தூண்டும்வகையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசினர்.
இதனால், விழித்துக் கொண்ட இந்து மக்களும், இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகள் 13-ந் தேதி மாபெரும் போராட்டத்தில் குதித்தனர். சென்னிமலையே மூச்சுவிட முடியாமல் திணறிப்போனது. கிறிஸ்துவ மிஷனரிக் கூட்டம் யாருக்கும் தெரியாமல் பதுங்கிக் கொண்டது. எங்கள் உயிரைக் கொடுத்தாவது சென்னிமலையை காப்பாற்றுவோம் என முருக பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில், நடந்த தகவல்களை எல்லாம் கேள்விப்பட்ட மத்திய இணை – அமைச்சர் முருகன், சென்னிமலைக்கு விரைந்து சென்றார். அங்குப் பேசிய அவர் , 3,000 ஆண்டுகள் பழமையான கோயிலும், பால தேவராய சுவாமிகளால் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்த இடமும், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற கோவிலுமான சென்னிமலை அருள்மிகு முருகன் திருத்தலத்தில் தரிசித்து பாரத மக்களின் உடல், உள்ளம், உயிர், அனைத்தையும் காத்திட வேலவனை வேண்டிக் கொண்டேன். வேலவனுக்காக நாங்கள் எந்த தியாகமும் செய்யத் தயார் என உறுதிமொழி கொடுத்தார். இதனால், முருக பக்தர்கள் மனம் மகிழ்ந்து போனார்கள்.