ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி செய்த தவறுகள் என்ன என்பதை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பைத் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் வெறும் 215 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது. அதன்பின் ஆடிய 14 உலகக்கோப்பைப் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்த நிலையில், டெல்லியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியையே சம்பவம் செய்து அசத்தியுள்ளது. இரு தரமான வேகப்பந்துவீச்சாளர்கள், 3 தரமான ஸ்பின்னர்களைக் கொண்டு ஆப்கானிஸ்தான் அணி சாதித்துள்ளது.
Wonderful all-round effort by Afghanistan led by a solid knock from @RGurbaz_21.
Bad day for @ECB_cricket.
Against quality spinners, you have to read them from their hand, which the England batters failed to do. They read them off the pitch instead, which I felt led to their… pic.twitter.com/O4TACfKh21— Sachin Tendulkar (@sachin_rt) October 15, 2023
இங்கிலாந்து அணியின் இந்தத் தோல்விக்கு சுழற்பந்து வீச்சாளர்களிடம் திணறியதே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் ஆற்றல் மிகச்சிறப்பாக இருந்தது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டனர்.
இங்கிலாந்து அணிக்கு இது மோசமான நாள். எந்தவொரு பேட்ஸ்மேனும் தரமான ஸ்பின்னர்களை எதிர்த்து விளையாடும் போது, அவர்களது கையில் பந்து இருக்கும் போதே கணிக்க வேண்டும். அவர்கள் பந்தை எப்படி போடுகிறார்கள், எப்படி போட்டால் பந்து எப்படி திரும்பும் என்பதை பேட்ஸ்மேனாக அறிந்து வைத்திருக்க வேண்டும். இதனை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் செய்ய தவறிவிட்டனர். அதுதான் அவர்களின் சரிவுக்கு காரணமாக இருந்ததாக பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.