பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஹாட்டரிக் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் களப் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் பாஜக உள்ளது. நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஹாட்டரிக் வெற்றியைப் பதிவு செய்ய உள்ளது. அதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது.
மேலும், பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என ஆர்எஸ்எஸ், விஹெச்பி., ஏபிவிபி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளில் பணியாற்றிவிட்டு, ஒரு சில காரணங்களால் ஒதுங்கியுள்ளவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதற்காக ஒரு வாட்ஸ் அப் கணக்கு துவங்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாகச் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் அமைப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.
இதனிடையே, தேர்தல் பணியில் ஆர்வம், திறமை, அனுபவம் உள்ளவர்களை முழு நேரப்பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 15 -ம் தேதி அன்று, கூடுவோம், கூட்டுவோம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் – சங் பரிவார் அமைப்புகள் புதிய திட்டத்தை வடிவமைத்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் இடங்களில் கூடுவோம் கூட்டுவோம் என்ற பெயரில் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆக மொத்தம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த திட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த கட்டமாகத் தேர்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதில், திறமையானவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும். அவ்வாறு முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் பாஜக வெற்றிக்காகக் களம் இறங்கப்பட உள்ளனர்.