சென்னையில் உள்ள பல முக்கிய தனியார் நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில், வளசரவாக்கம், தண்டலம், டிபென்ஸ் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, 7 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஹேமலதா மாரியப்பன் என்பவரைத் தேடி வளசரவாக்கத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால், மோசடி வழக்கில் தொடர்புடைய ஹேமலதா மாரியப்பன், சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு வருவார்கள் என்ற பயம் காரணமாகக் கடந்த 11 மாதங்களுக்கு முன்பே வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், சிபிஐ அதிகாரிகள் ஹேமலதா மாரியப்பன் தொடர்புடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் லிஸ்ட் தயார் செய்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது