தேசிய திரைப்பட விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர்!
Sep 13, 2026, 02:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய திரைப்பட விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர்!

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 06:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மணிகண்டன், மாதவன், அல்லு அர்ஜூன், ஆலியா பட், ராஜமவுலி உள்ளிட்ட திரைக்கலைஞர்களுக்கு தேசிய விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

2021 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.

இதில் சிறந்த தமிழ் படமாக மணிகண்டன் இயக்கிய ‛கடைசி விவசாயி’ தேர்வானது. அதில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது.

இதுதவிர சிறந்த படமாக மாதவனின் ராக்கெட்ரி, சிறந்த நடிகராக புஷ்பா படத்தின் அல்லு அர்ஜூன் , சிறந்த நடிகைகளாக கங்குபாய் படத்தின் ஆலியா பட் மற்றும் மிமி படத்தின் கிர்த்தி சனோன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டன.

மேலும் ஆயிரம் கோடி வசூலித்த ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படம் 6 தேசிய விருதுகளை வென்றது.

சிறந்த இசையமைப்பாளர்களாக ஆர்ஆர்ஆர் படத்திற்கு இசையமைத்த ஆஸ்கர் விருது வென்ற எம்எம் கீரவாணி, புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டது.

சிறந்த பாடகியாக பார்த்திபன் இயக்கிய ‛இரவின் நிழல்’ படத்தில் இடம்பெற்ற ‛ மாயவா ‘ பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு விருது அறிவிக்கப்பட்டது. மேலும் கருவறை என்ற ஆவணப்படத்திற்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

நம்மூர் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கிய ஹிந்தி படமான ஷெர்ஷா படத்திற்கும் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. அதோடு பரபரப்பை கிளப்பிய தி காஷ்மீர் பைல்ஸ் படம் சிறந்த தேசிய படமாக தேர்வாகி இருந்தது.

விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு டெல்லியில் இன்று தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். அவருடன் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் மாதவன், அல்லு அர்ஜூன், ஆலியா பட், கிர்த்தி சனோன், எஸ்.எஸ்.ராஜமவுலி, ஸ்ரேயா கோஷல், பங்கஜ் திரிபாதி, ஸ்ரீகாந்த் தேவா, மணிகண்டன், தேவிஸ்ரீ பிரசாத், எம்எம் கீரவாணி, விஷ்ணுவர்தன் உள்ளிட்ட பலரும் தேசிய விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

Tags: President Droupadi Murmunationalfilmawards
Share
Tweet
SendShare
Previous Post

சிவகுமார் ரூ.74.93 கோடி சொத்து சேர்த்த வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Next Post

சென்னையில் சிபிஐ அதிகாரிகள் – என்ன காரணம்?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies