உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொள்ள உதவும் குறிப்பிடத்தக்க அம்சம் நமோ செயலியில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களுடைய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை எளிதாகத் தொடர்பு கொள்ள உதவும் வசதி நமோ செயலியில் உள்ளது. இந்த வசதி, நமது ஜனநாயக உணர்வை மேம்படுத்துவதில், நீண்ட தூரம் செல்லும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைப்பை ஆழப்படுத்தவும், அவருடனான தொடர்பை எளிதாக்கவும், ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கவும் இது உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில், “நமோ செயலியில் மிகவும் சுவாரஸ்யமான அம்சம் உள்ளது, இது நமது ஜனநாயக உணர்வை மேம்படுத்துவதற்கு நீண்ட தூரம் செல்லும்.
இது உங்கள் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைப்பை ஆழப்படுத்தவும், அவருடனான ஈடுபாட்டை எளிதாக்கவும், ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கவும் உதவும். சுவாரஸ்யமான கலை நிகழ்ச்சிகள் முதல் துடிப்பான விளையாட்டுப் போட்டிகள் வரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாக்காளர்கள் இணைவதை எளிதாக்கும் என்று பதிவிட்டுள்ளார்.