பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை!
Mar 15, 2026, 09:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸா மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதலை நிறுத்தினால், பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்திருக்கின்றனர்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தன்னாட்சி பெற்ற நகரம் காஸா. இந்த நகரை ஹமாஸ் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், கடந்த 7-ம் தேதி காலை திடீரென ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இதனால் இஸ்ரேல் திக்குமுக்காடிப்போனது.

எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை மூலம் கொத்துக் கொத்தாக குண்டு மழை பொழிந்ததோடு, பீரங்கி மற்றும் டாங்கிகளின் மூலம் குண்டுகளை வீசியது. மேலும், இஸ்ரேல் நாட்டின் காலாட் படைகளும் காஸா நகருக்குள் ஊடுருவி ஹமாஸ் தீவிரவாதிகளை தேடித் தேடி வேட்டையாடி வருகிறது.

இப்போர் 12-வது நாளாக இன்றும் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேசமயம், இஸ்ரேல் நடத்திய பதிலடித் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 3,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்.

அதேபோல, இஸ்ரேல் தரப்பில் 6,500-க்கும் மேற்பட்டோரும், காஸா நகரைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோரும் காயமடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், முக்கியத் தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டதோடு, ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவரவாத முகாம்கள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டன. இதனால், ஹமாஸ் தீவிரவாதிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

இதனிடையே, இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இந்த பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேபோல, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பிணைக் கைதிகளை விடுவிக்கும்படி வலியுறுத்தி இருக்கின்றனர்.

இந்த நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்க முன்வந்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், முக்கிய நிபந்தனை ஒன்றையும் விதித்திருக்கின்றனர். அதன்படி, காஸா பகுதியில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேலிய படைகள் நிறுத்தினால், அடுத்த ஒரு மணி நேரத்தில் பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: WARIsraelHamas
ShareTweetSendShare
Previous Post

லெபனான் எல்லையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

Next Post

மகாகாலேஷ்வர் கோவிலுக்கு சென்ற தமிழக ஆளுநர் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies