மத்திய அரசு திட்டங்களை திமுக அரசு கொண்டு போக தவறினால் பாஜகவே அவர்களுக்கு இந்த திட்டத்தை கொண்டு சேர்க்க முனைப்போடு ஈடுபடுவோம் என பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பாரதிய ஜனதாவின் அமைப்புச்சாரா மக்கள் சேவை பிரிவு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், அமைப்புசாரா தொழிலாளர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன்,
மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அவர்களுக்கு குடும்பத்தாருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக ஏழை எளிய தொழிலாளருக்கு ஓய்வூதிய திட்டம், ஏழை மக்களுக்காக வீடு, ஏழை மக்களுக்கு மருத்துவ திட்டம், ஏழை மக்களுக்கு கல்வி உதவியாக நவோதயா பள்ளிகள் திட்டம், விபத்து காப்பீடு திட்டம் இப்படியாக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
தூங்கிக் கொண்டிருக்கும் திமுகவை எழுப்புவதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கப்படும்.
கிட்டத்தட்ட 31 விதமான தொழிலாளர்களை ஒருங்கிணைத்து,
அவர்களுக்கான மத்திய அரசு திட்டங்களைத் திமுக அரசு கொண்டு போக தவறினால் பாஜகவே அவர்களுக்கு இந்த திட்டத்தை கொண்டு சேர்க்க முனைப்போடு ஈடுபடுவோம். அதற்கான ஆர்ப்பாட்டம் தான் இந்த ஆர்ப்பாட்டம்.