இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த இதுதான் காரணம்: ரகசியம் உடைத்த ஜோ பைடன்!
Mar 15, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த இதுதான் காரணம்: ரகசியம் உடைத்த ஜோ பைடன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 22, 2023, 08:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு சவூதி அரேபியா அங்கீகரித்துவிடக் கூடாது என்பதுதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரகசியத்தை உடைத்திருக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, 1948-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி, யூதத் தலைவர்கள் சேர்ந்து இஸ்ரேல் தனி நாடு அறிவிப்பை வெளியிட்டனர். அந்நாட்டை அன்றையதினமே தனி நாடாக அமெரிக்கா அங்கீகரித்தது. தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தன.

ஆனால், அரபு நாடுகள் மட்டும் இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. குறிப்பாக, சவூதி அரேபியா தற்போதுவரை இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாக, இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், சமீப காலங்களில் இரு நாடுகளும் ஒரு நல்ல உறவு அமைய அடித்தளம் அமைத்து வந்தன.

இரு நாடுகளும் ஒன்றையொன்று நெருங்கி வருவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபரின் தலைமையில் சவூதி அரேபியாவுடன் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், கடந்த 7-ம் தேதியன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேலும் கடுமையான பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இச்சம்பவத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.

அதேபோல, பாலஸ்தீனத்தை ஈரான், கத்தார், லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகள் ஆதரிக்கின்றன. அந்த வகையில், பாலஸ்தீன பொதுமக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே சவூதி அரேபியாவும் எடுத்திருக்கிறது. இதன் காரணமாக, இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையேயான உறவு மீண்டும் நலிவடையத் தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “திடீரென இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்குக் காரணம், சவூதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நல்லுறவு ஏற்படக் கூடாது என்று ஹமாஸ் எண்ணியதுதான். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க வழி செய்து, நல்லுறவை ஏற்படுத்த முயன்றேன். இஸ்ரேலை தனி நாடாக சவூதி அரேபியா அங்கீகரிக்கவும் முன்வந்தது. ஆனால், வரலாற்று சிறப்புமிக்க அத்தகைய நிகழ்வு நடந்து விடக் கூடாது என்று ஹமாஸ் விரும்புகிறது. இதனால்தான் திடீர் தாக்குதலை நடத்தியது” என்று கூறியிருக்கிறார்.

Tags: americaPresidentJo biden
ShareTweetSendShare
Previous Post

இந்தியா-கனடா உறவு சிக்கலான கட்டத்தில் இருக்கிறது: ஜெய்சங்கர்!

Next Post

தரைமட்டமான பட்டாசு குடோன் – தர்மபுரியில் பரபரப்பு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies