நாடு மற்றும் மக்கள் நலனுக்காகவே சனாதன தர்மம் பாடுபடுகிறது: உ.பி. முதல்வர் யோகி!
Mar 15, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு மற்றும் மக்கள் நலனுக்காகவே சனாதன தர்மம் பாடுபடுகிறது: உ.பி. முதல்வர் யோகி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீயசக்திகள் தலைதூக்கும்போதெல்லாம், சனாதன தர்மம் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாடுபடுகிறது என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, 9-வது நாளான ‘மகா நவமி’யில், உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலின் சக்தி பீடத்தில் உள்ள அம்மன் சித்திதாத்ரிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, துர்கா தேவியின் 9 அவதாரங்களைக் குறிக்கும் வகையில், 9 கன்னிப் பெண்களின் கால்களைக் கழுவி கன்யா பூஜை செய்தார்.

மேலும், வேத மந்திரங்கள் முழங்க, சிறுமிகளுக்கு ஆரத்தி எடுத்து ஆசிரவாதம் பெற்று, அச்சிறுமிகளின் நெற்றியில் ‘ரோலி திலகம்’ தடவினார். இந்த 9 சிறுமிகள் தவிர, திரளாக வந்திருந்த சிறுமிகளுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார். மேலும், சிறுமிகளின் ஆசிர்வாதத்தைப் பெறும்போது, அவர்களுக்கு தட்சணை மற்றும் பரிசுகளையும் முதல்வர் யோதி ஆதித்யநாத் வழங்கினார்.

பூஜைக்குப் பிறகு, கோரக்நாத் கோவில் சமையலறையில் சமைத்த உணவை யோகி ஆதித்யநாத் தனது கைகளால் சிறுமிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “நாளை விஜயதசமி பண்டிகை. இது, தர்மம், உண்மை மற்றும் நீதியின் வெற்றித் திருவிழா.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும், தீய சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம், சனாதன தர்மம் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு, நாட்டு நலனுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாடுபடுகிறது. மேலும், மனிதகுலத்திற்கு நல்ல வழியைக் காட்டுகிறது” என்றார்.

கன்யா பூஜையின்போது, ​​கோரக்நாத் கோவில் தலைமை அர்ச்சகர் யோகி கமல்நாத், காசியில் இருந்து வந்த மகாமண்டலேஷ்வர் சந்தோஷ் தாஸ் சதுவா பாபா, கலிபாரி மஹந்த் ரவீந்திரதாஸ், கோரக்நாத் கோவில் அர்ச்சகர் ஆச்சார்யா ராமானுஜ் திரிபாதி வேதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: uttar pradeshCm Yogi AdityanathNavratri Festival
ShareTweetSendShare
Previous Post

தேசியக் கொடியை அவமதித்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை.

Next Post

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – ஒரே இரவில் 8 கடைகளில் கொள்ளை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies