ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் வங்கதேச அணிக்கு 383 ரன்கள் இலக்கு.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தென்னாபிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் களமிறங்கினர்.
இதில் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்தார் குயின்டன் டி காக். அவரோடு களமிறங்கிய ரீசா ஹென்ட்ரிக்ஸ் 6 வது ஓவரில் 19 பந்துகளுக்கு 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு ராஸ்ஸி வான் டெர் டுசென் அடுத்த ஓவரிலேயே 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 36/2 ஆகா இருந்தது. பின்னர் ஐடன் மார்க்ராம் களமிறங்கினார்.
ஐடன் மார்க்ராம் மற்றும் குயின்டன் டி காக் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இவர்களின் இணையை பிரிக்க வங்கதேச வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் இவர்களை அசைக்க முடியாமல் இருந்தது அப்போது வங்கதேச அணியின் பந்துவீச்சாளர் ஷகிப் அல் ஹசன் பந்துவீச அந்த பந்தை அடித்த ஐடன் 60 ரங்களில் அவுட் ஆகி சென்றார்.
பின்னர் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்து 8 சிக்சர்கள் மற்றும் 2 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 49 பந்துகளில் 90 ரன்களை எடுத்து அசத்தினார்.
அடுத்து 140 பந்துகளில் 174 ரன்களை அடித்த குயின்டன் டி காக் 45 வது ஓவரில் ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய டேவிட் மில்லர் 4 சிக்சர்கள் என 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வங்கதேச அணியில் ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்களும், ஷகிப் அல் ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்களும் எடுத்தனர்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 382 ரன்கள் எடுத்துள்ளது.