ராஜஸ்தானில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் டிராக்டர் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரத்பூர் மாவட்டம் அடா கிராமத்தில் இரு பிரிவினர் இடையே 3 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரு பிரிவினரும் மீதும் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அதே பிரச்னை தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முதியவர் ஒருவர் டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்டார். சிலர் காயம் அடைந்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமறைவான டிராக்டர் ஓட்டுநரை காவல்துறை தேடி வருகின்றனர்.