சனாதன தர்மத்தின் சின்னம் ராமர் கோவில் என்றும், அது கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
இதனையடுத்து அங்கு பிரச்சாரம் களைகட்டியுள்ளது. சிந்த்வாராவில் தேர்தர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்நாத், ராமர் கோவில் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தம் என்று கூறினார்.
சனாதனத்தின் சின்னம் ராமர் கோவில் என்றும், அது கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவரே ராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதாமாதா கோயில் கட்டப்படும் என்றும், கோவில் சாமியார்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும் என கமல்நாத் அறிவித்துள்ளார்.