தமிழக பாஜகவினருக்கு திமுக அரசு மற்றும் திமுகவால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய பாஜக தலைமையால் அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழு இன்று தமிழகம் வருகை தந்தது.
தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சென்னை பனையூரில் உள்ள வீட்டின் முன்பு பாஜக கொடிக்கம்பம் அகற்றம், போராட்டம் நடத்திய தொண்டர்கள் மீது அதிகாரிகள் தாக்குதல் நடத்தியது, பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை திமுக தொடர்ந்து கொடுத்து வருகிறது.
இதனால், திமுக திட்டமிட்டு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்தார். இந்த குழுவில் சதானந்த கவுடா, சத்யபால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு இன்று தமிழகம் வருகை தந்தது.
அந்த குழு பாஜக தொண்டர்கள் தமிழகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கள ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடன் 4 பேர் கொண்ட குழு ஆலோசனை செய்த பின்னர் அது தொடர்பான இறுதி அறிக்கையைத் தேசிய தலைமைக்கு உறுதியாக சமர்ப்பிக்க உள்ளனர்.