பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா பன்னு நகரில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உயிரியல்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஷேர் அலி.
இவர் அண்மையில், இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்து மிக விளக்கமாகப் பேசினார். அவரது இந்த பேச்சு, சமூக ஊடகங்களில் வெளியானது. அவரது இந்த பேச்சுக்குப் பாகிஸ்தானில் உள்ள மதகுருமார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்குப் பதில் அளித்த உயிரியல்துறை பேராசிரியர் அலி, டார்வினின் பரிணாம வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து பாடங்களும் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்றும், தன் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இதனால், ஆவேசம் அடைந்த மதகுருமார்கள், ஷிரியா விதித்துள்ள கோட்பாடு அடிப்படையில் ஆண்களுடன் பெண்கள் தேவையில்லாமல் கலப்பது அனுமதிக்கப்படாது என குறிப்பிடப்பட்டிருந்தது. பேராசிரியர் அலியை இந்த அறிக்கையைப் படிக்க வைத்து, அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
மதகுருமார்கள் செய்துள்ள இந்த அராஜக செயலுக்குக் கல்வியாளர்களும், இஸ்லாமியப் பெண்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரியல்துறை பேராசிரியர் ஷேர் அலிக்கு, மதகுருமார்கள் கொடுத்த நூதன தண்டனை இது எனக் கொந்தளிக்கின்றனர்.