மகனை தெலங்கானா முதலமைச்சராக்க சந்திரசேகர் ராவ் துடிப்பதாக குற்றச்சாட்டு
சந்திரசேகர் ராவ் தனது மகன் கே.டி.ராமராவை தெலங்கானா முதல்வராக்க நினைக்கும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி சூர்யாபேட்டில் நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, காங்கிரஸ் மற்றும் ஆளும் பிஆர்எஸ் கட்சிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய அவர், இரண்டுமே பரம்பரை கட்சிகள் என்றும், அவர்களால் மாநிலத்திற்கு நல்லது செய்ய முடியாது என்றும் கூறினார்.
“முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தனது மகன் கே.டி.ராமராவை முதல்வராக்க நினைக்கும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க விரும்புவதாகவும் கூறினார்.
தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் பதவியேற்பார் என்றும் அமித் ஷா உறுதியளித்தார்.