வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர்.
ஸ்ரீராமர் வாழ்ந்த காலத்தில் இராமாயண காவியத்தை இயற்றியவர் மகரிஷி வால்மீகி. இவரது பிறந்தநாளை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “மகரிஷி வால்மீகி ஜெயந்தி அன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! ‘இராமாயணம்’ என்ற பழங்காலக் கவிதையை எழுதியவரும், சமூக சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமான மகரிஷி வால்மீகி, இந்திய கலாச்சாரத்தை உருவாக்கியவர்களில் மிகவும் மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளார். அவரது புனித நினைவுக்கு நூற்றுக்கணக்கான வணக்கங்கள்!” என்று தெரிவித்திருக்கிறார்.
महर्षि वाल्मीकि जयंती पर सभी देशवासियों को मेरी हार्दिक शुभकामनाएं! आदिकाव्य 'रामायण' के रचयिता तथा सामाजिक समानता और समरसता के प्रतीक, महर्षि वाल्मीकि का भारतीय-संस्कृति के निर्माताओं में परम आदरणीय स्थान है। उनकी पावन स्मृति में शत शत नमन!
— President of India (@rashtrapatibhvn) October 9, 2022
அதேபோல, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாட்டு மக்களுக்கு வால்மீகி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். சமூக சமத்துவம் மற்றும் நல்லெண்ணம் தொடர்பான அவரது விலைமதிப்பற்ற சிந்தனைகள், இந்திய சமூகத்தை இன்னும் பண்படுத்துகின்றன. மனிதநேயம் பற்றிய அவரது செய்திகள் மூலம் அவர் காலங்காலமாக நமது நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாக இருப்பார்” என்று தெரிவித்திருக்கிறார்.
देशवासियों को वाल्मीकि जयंती की अनंत शुभकामनाएं। सामाजिक समानता और सद्भावना से जुड़े उनके अनमोल विचार आज भी भारतीय समाज को सिंचित कर रहे हैं। मानवता के अपने संदेशों के माध्यम से वे युगों-युगों तक हमारी सभ्यता और संस्कृति की अमूल्य धरोहर बने रहेंगे। pic.twitter.com/wls3yN8ZfJ
— Narendra Modi (@narendramodi) October 28, 2023
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “இராமாயணத்தை இயற்றியதன் மூலம் மகரிஷி வால்மீகி, மரியாத புருஷோத்தமரின் வாழ்க்கையை மக்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்யும் மாபெரும் பணியைச் செய்தார். இந்த காலத்தால் அழியாத பணி, பகவான் ஸ்ரீராமர் நிறுவிய இலட்சியங்களால் சமுதாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் மதத்தின் பாதையைக் காட்டுகிறது. அத்தகைய மாபெரும் கவிஞரான வால்மீகி அவர்களின் பிறந்தநாளன்று அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
आदिकवि महर्षि वाल्मीकि जी ने रामायण की रचना कर मर्यादा पुरुषोत्तम प्रभु श्री राम के जीवन को जन-जन के हृदय में सदैव के लिए जीवंत बनाने का भगीरथ कार्य किया। यह कालजयी रचना प्रभु श्री राम द्वारा स्थापित आदर्शों से समाज को प्रेरित कर धर्म का मार्ग दिखा रही है।
ऐसे महान कवि वाल्मीकि… pic.twitter.com/C1vOAF2VH3
— Amit Shah (@AmitShah) October 28, 2023