கேரளா: பியூன் வேலைக்காகக் குவிந்த பட்டதாரிகள்
Aug 14, 2025, 10:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளா: பியூன் வேலைக்காகக் குவிந்த பட்டதாரிகள்

Web Desk by Web Desk
Oct 28, 2023, 02:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலமாக உள்ள கேரளாவில், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

கேரளாவில் அரசு அலுவலகத்தில் காலியாக உள்ள பியூன் வேலைக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான நேர்காணல் தேர்வு நேற்று எர்ணாகுளத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக வந்திருந்தனர். பியூன் வேலையில் சேருவதற்கு அடிப்படைத் தகுதி 7-ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். மேலும், சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு மாதம் ரூபாய் 23 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.

பியூன் வேலையாக இருந்தாலும், அரசு வேலை என்பதால், இந்த வேலைக்காக பொறியியல் முடித்தவர்கள், இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் என 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேர்காணலுக்கு அதிகாலையிலேயே திரண்டு வந்தனர்.

இன்ஜினீயரிங், பி.டெக் போன்ற உயர் படிப்புகள் படித்து விட்டு வேலை கிடைக்காமல், உணவு விநியோகம், ஓட்டுநர் வேலைகள் செய்வதற்கு பதிலாக இந்த வேலை நிரந்தரமானது என்பதாலும், அதிக சம்பளம் வரும் அரசு வேலை என்பதாலும் இதில் சேர ஆர்வமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நேர்காணலுக்கு வந்திருந்த பிரசாந்த் என்பவர் கூறுகையில், கேரள அரசின் மின்வாரியம் போன்ற நிறுவனங்களில் எங்களை நியமித்தால் சம்பளம் இன்னும் அதிகமாக இருக்கும். அதாவது மாதம் ரூபாய் 30 ஆயிரத்திற்கு மேல் கிடைக்கும் என்பதால் வேலைக்கு விண்ணப்பித்திருப்பதாக கூறினார்.

சைக்கிள் ஓட்டும் தேர்வில் 101 பட்டதாரிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களுக்கு மேலும் சில தேர்வுகள் உள்ளன. அவற்றையும் கடந்த பிறகுதான் தரவரிசை பட்டியல் தயாராகும். அதன்பிறகே வேலை யாருக்கு கிடைக்கும் என்பது அறிவிக்கப்படும்.

இளைஞர்கள் பல இலட்ச ரூபாய் செலவு செய்து 4 முதல் 5 ஆண்டுகள் வரை பட்டப்படிப்பு படித்து முடித்தாலும், தகுதியான வேலை கிடைக்காததால் சாதாரண பியூன் வேலை என்றாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்துள்ளதை இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது. அந்த அளவுக்கு வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2022-ஆம் ஆண்டு உள்ள தகவல்களின் படி கேரளாவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 5.1 இலட்சமாக உள்ளது. இதில், 3.2 இலட்சம் பேர் பெண்கள் ஆவார்கள். இது மற்ற மாநிலங்களை விட அதிகமாகும்.

Tags: Keralacycling
ShareTweetSendShare
Previous Post

ககன்யான்: பெண் விண்வெளி வீராங்கனை அனுப்ப திட்டம்

Next Post

வால்மீகி ஜெயந்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies