ககன்யான்: பெண் விண்வெளி வீராங்கனை அனுப்ப திட்டம்
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ககன்யான்: பெண் விண்வெளி வீராங்கனை அனுப்ப திட்டம்

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 02:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில், பெண் விண்வெளி வீராங்கனை அனுப்பும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, டிவி-டி1 என்ற சோதனை இராக்கெட் மூலம் விண்கலம் கடந்த 21-ஆம் தேதி விண்ணில் ஏவி இஸ்ரோ வெற்றிகரமாக சோதனை மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து, இன்னும் சில மாதங்களில் அதிக சோதனைகளை நடத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இஸ்ரோ இன்டர்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட்டால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட ‘வியோமித்ரா’ என்ற பெண் ரோபோ, எல்.வி.எம்-3 இராக்கெட் மூலம் விண்வெளியில் உள்ள சுற்றுப்பாதைக்கு அனுப்பி சோதனை நடத்தப்பட உள்ளது.

இதில், இஸ்ரோ கட்டுப்பாட்டு அமைப்புகள், வெப்ப பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பாராசூட் அமைப்புகள் சோதனை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து ஏர்-டிராப் டெஸ்ட் மற்றும் பேட் அபார்ட் டெஸ்ட் என்ற 2 அறிவியல் சோதனைகள் செய்யப்பட உள்ளது.

இதை அடுத்து வரும் 4 சோதனைகளில் டி.வி-டி2 இராக்கெட் சோதனை 2-வதாக இருக்கும். ஏற்கனவே, அனுப்பிய டிவி-டி1 இராக்கெட் போல் இல்லாமல், டிவி-டி2 இராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்த உடன், விண்கலத்தின் அணுகுமுறையை அறிந்து கொள்வதற்கு மீண்டும் நிலைப்படுத்துவதற்கான ஒரு கட்டுப்பாட்டு அமைப்பையும் கொண்டிருக்கும்.

ககன்யான் திட்டத்தில் பெண் விண்வெளி வீராங்கனை அனுப்பும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது. மேலும், டிவி-டி1 இராக்கெட்டில் இருந்து கடலில் உப்பு நீரில் விழுந்த விண்கலத்தை மீண்டும் பயன்படுத்த முடியுமா? இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது, இராக்கெட்டை மீண்டும் பயன்படுத்துவதற்கான திட்டத்தையும் வகுத்து வருகிறோம். இதற்காக விண்கலத்தைத் திறந்து சுத்தம் செய்து என்ன செய்யலாம் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. ககன்யான் திட்டத்தின் கீழ் பொருத்தமான சோதனைத் திட்டத்திற்கு அதைத் திருப்ப முயற்சிகள் எடுக்கப்படும் 2040-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவது உட்பட, இந்தியாவிற்கான இலட்சிய விண்வெளிப் பயண இலக்குகளில் முதன்மையானது ககன்யான் ஆகும் என்று தெரிவித்தனர்.

Tags: ISROisro gsat 24
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் தீவிரவாதிகளால் உருக்குலைந்து வரும் காஸா நகரம்!

Next Post

கேரளா: பியூன் வேலைக்காகக் குவிந்த பட்டதாரிகள்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies