ஆர்எஸ்எஸ் மூத்த பிரச்சாரகர் ஆர் ஹரி அவர்கள் இன்று ( 29/10/2023 ) காலை கொச்சியில் இறைவனடி சேர்ந்தார். 93 வயதான இவர் முதுமை காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கேரள மாநிலத்தின் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முதல் தலைவரான இவர், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில பாரதீய பிரமுகராகவும் பணியாற்றினார்.
இவர் 1930 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ரங்க ஷெனாய் மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு திருமகனாக பிறந்தார். இவரது தந்தையும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக பணியாற்றியவர் .
செயின்ட் ஆல்பர்ட்ஸ் மற்றும் மகாராஜாஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது 1948 ஆம் ஆண்டு காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது இவர் 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து வந்த உடன் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும் சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். பின்னர் 1951 ஆம் ஆண்டில் முழு நேர ஆர்எஸ்எஸ் பணியாளரானார். பிறகு 1989 ஆம் ஆண்டு முதன்மை பிரச்சாரகராக பதவியேற்றார்.
பின்னர் 1990 ஆம் ஆண்டு அகில பாரதிய சஹா பௌதிய பிரமுகரர் ஆனார். 2005 வரை பௌதிய பிரமுகராக பணியாற்றினார். ஆர்எஸ்எஸ் முறைப்படி 75 வயதில் அவர் தனது அனைத்து அதிகாரப் பணிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இருப்பினும் இரண்டு ஆண்டுகள் சில சிறப்பு பணிகளை செய்து வந்தார்.
அனைத்து மொழிகளிலும் புலமை பெற்ற இவர் 2000 ஆம் ஆண்டு வட இந்தியாவில் நடந்த ஒரு விபத்தில் பலத்த காயம் அடைந்து மலையாளம் தவிர மற்ற மொழிகளின் நினைவாற்றலை இழந்து சிகிச்சை பெற்றார் பின்னரே அவருக்கு நினைவாற்றல் திரும்பியது.
அதன் பிறகு மலையாளம், கொங்கனி, தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி என அவர் அறிந்த 10 மொழிகளில் சுமார் 60 நூல்களை வெளியிட்டார். இவர் இயற்றியதில் வியாசபாரதத்திலே திரௌபதி புகழ் பெற்ற நூலாக திகழ்கிறது.
தேசத்திற்காக பெரும்பணியாற்றிய கருமயோகி என்றும் ஒளியாக திகழ்கிறார்.