பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தான் மக்கள் உடனே வெளியேறவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2021 -ம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால், தலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தானியர்கள் பலர் தங்கள் நாட்டைவிட்டு பாகிஸ்தானில் குடியேறினர். இதுவரை 17 லட்சம் பேர் குடியேறியுள்ளனர்.
இதில், 13 லட்சம் பேர் அகதிகளாகப் பதிவு செய்துள்ளனர். 8.8 லட்சம் பேர் விசா மற்றும் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். 17 லட்சம் பேர் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள். இதில், இந்த சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
எனவே, இவர்கள் அனைவரும் வரும் நம்பர் 1-ம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனப் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவோம் என்றும், ஆயுதப்படைகளைப் பயன்படுத்தி வெளியேறுவோம் என்றும்,
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடியாலும், பொது மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதாலும் அரசு இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஏதுவாக இருந்தாலும், இது மனிதநேயமற்ற செயல் என உலக நாடுகள் பாகிஸ்தான் மீது கண்டன கணைகளை வீசி வருகிறது. இதனால், பாகிஸ்தான் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.