ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜெர்மனி பெண் உயிரிழப்பு!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜெர்மனி பெண் உயிரிழப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 31, 2023, 01:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு, பிணைக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட 22 வயதான ஜெர்மனி பெண் ஷானி லவுக் உயிரிழந்து விட்டதாகவும், அவரது மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி நேரடித் தாக்குதலிலும் ஈடுபட்டனர். அப்போது, இஸ்ரேலின் ரைம் பகுதியில் நடந்த சூப்பர் நோவா இசை விழாவிலும் ஹமாஸ் தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இத்தாக்குதலில், இசை விழாவில் பங்கேற்ற 260 பேர் கொல்லப்பட்டனர். மேலும், விழாவில் பங்கேற்ற பலரையும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அந்த வகையில், இந்த இசை விழாவில் பங்கேற்ற ஜெர்மனியைச் சேர்ந்த 22 வயதான ஷானி லவுக் என்கிற இளம் பெண்ணையும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

அப்போது, அப்பெண்ணை கொடூரமாகத் தாக்கியவர்கள், அவரது ஆடைகளைக் களைந்து ஜீப்பின் பின்பகுதியில் வைத்து தெருத் தெருவாக ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

இதைக் கண்ட ஷானி லவுக்கின் தாய் ரிகார்டா, தனது மகளை விடுவிக்குமாறு பாலஸ்தீன மக்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் உருக்கமாக வேண்டுகோளை விடுத்தார். அப்போது, பாலஸ்தீனம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், காஸாவில் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் ஷானி லவுக் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இத்தகவல் பொய் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. காரணம், இஸ்ரேல் இராணுவ வீரர்கள் சமீபத்தில் ஒரு மண்டை ஓட்டை கண்டெடுத்திருக்கிறார்கள். அந்த மண்டை ஓட்டை மரபணு பரிசோதனை செய்தபோது, அது ஷானி லவுக்கின் மண்டை ஓடு என்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, ஷானி லவுக் இறந்து விட்டதாக இஸ்ரேல் இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

மேலும், இத்தகவலை ஷானியின் உறவினர்களும் உறுதி செய்திருக்கிறார்கள். இதுகுறித்து ஷானி லவுக்கின் தாய் ரிகார்டா கூறுகையில், “எனது மகள் ஷானி உயிரிழந்து விட் டதாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது மிகவும் துயரமான செய்தி. அவளது இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்று தெரி வித்திருக்கிறார்.

அதேபோல, அவரது உறவினர்கள் கூறுகையில், “ஷானி உயிரிழந்து விட்டது உறுதியாகி இருக்கிறது. அதேசமயம், அவரது ஆண் நண்பரைக் காணவில்லை. அனேகமாக அவர் ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சிக்கி இருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: killedIsraelHamas TerroristGerman lady
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் அரசு விடுத்த புதிய எச்சரிக்கை!

Next Post

5,000 இரயில் இன்ஜின்களில் சிசிடிவி கேமரா!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies