சிவகங்கை, இலுப்பைக்குடி கிராமத்தில் அமைந்துள்ள இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் ஆள்சேர்ப்பு பயிற்சி மையத்தில் பிரமாண்டமான பதவிப்பிரமாண அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பயிற்சி காவலர்களின் தேர்ச்சி மற்றும் பதவிப்பிரமாண அணிவகுப்பு விழாவிற்கு, இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் ஐஜி அசோக்குமார் தலைமை வகித்தார். பதவிப்பிரமாணத்திற்குப் பிறகு, காவலர்கள் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் இணைந்து நாட்டின் பாதுகாப்பிற்கு தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள்.
இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையானது, நாட்டின் சிறந்த படை ஆகும். இப்படை G-20 மாநாட்டின் பாதுகாப்பு, அமர்நாத் யாத்திரை, பேரிடர் மேலாண்மை, ஐ.நா அமைதிப் பணிகளில் ஈடுபடுத்துதல் மற்றும் எல்லைப் பாதுகாப்புடன் நக்சல்கள் நிறைந்த பகுதிகளில் நக்சல் நடவடிக்கை போன்ற பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது.
அணிவகுப்பு தொடங்கும் முன், தலைமை விருந்தினரை சிவகங்கை இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் ஆள்சேர்ப்பு பயிற்சி மையத்தின் டிஐஜி அச்சல் சர்மா வரவேற்றார். அணிவகுப்பைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா, கண்கவர் செயல் விளக்கம் மற்றும் கண்காட்சிகள் நடைபெற்றன.
அணிவகுப்புக்கு பயிற்சி காவலர்களின் உறவினர்கள் மற்றும் சிவில், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.