சபரிமலையில் புதிய நடைமுறையாக, நிலக்கல் வாகன நிறுத்துமிடம் மையம் ‘பாஸ்டேக்’ உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த திருக்கோவிலுக்குக் கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்கள் பலரும் தங்களது வாகனம், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சபரிமலைக்கு வருகின்றனர். இந்த நிலையில், நிலக்கல் பகுதியில் உள்ள பார்க்கிங் மைதானத்தில் தங்களது வாகனங்களை நிறுத்துவது வழக்கம். இந்த நிலக்கல் வாகன நிறுத்துமிடம் மையம் ‘பாஸ்டேக்’ உடன் தற்போது இணைக்கப்பட உள்ளது.
‘பாஸ்டேக்’ மூலம் பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்கும் பொறுப்பு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 10-ம் தேதி நிலக்கல்லில் சுங்கச்சாவடி திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான நேரமும், நீண்ட வரிசைகளில் காத்திருப்பதால் பக்தர்களுக்கு ஏற்படும் நெருக்கடியும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.