அமைச்சர் ரகுபதி மீது ஊழல் வழக்குகள் உள்ளன! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Mar 15, 2026, 10:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் ரகுபதி மீது ஊழல் வழக்குகள் உள்ளன! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Nov 6, 2023, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பதை மட்டும் தான் எப்போதும் பாஜக சிந்திக்கும். எனப் பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை விராலிமலை தொகுதியில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

நமது தேசியப் பறவையான மயில், அதிகம் உள்ள ஊர் விராலிமலை. இங்குள்ள விளாப்பட்டி மற்றும் பெரியமூளிப்பட்டி கிராமங்களில், 2000 ஆண்டுகள் தொன்மையான இரும்பு உருக்கு ஆலைகள், பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின் தொழில்முனைப்பு மற்றும் அறிவியல் வளர்ச்சியின் வெளிப்பாடாகவே இது தெரிகிறது. தென்னிந்தியாவின் அஜந்தா குகை’ என்று போற்றப்படும், மூலிகைகளால் வரையப்பட்ட சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், 7ம் நூற்றாண்டில், (கி.பி.600 – 630) பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வரையப்பட்டவை.

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகுபதி, சிவ மெய்யநாதன் என இரு அமைச்சர்கள் இருந்தும், வேலைவாய்ப்புகள் வழங்க ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தின் சட்டம், ஊழல் தடுப்பு மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி. இவர் மேலேயே…

— K.Annamalai (@annamalai_k) November 6, 2023

சனாதன தர்மத்தில் அனைத்து மக்களும் சமம் என்பதற்குச் சான்று, விராலிமலை ராஜாளிப்பட்டி ஸ்ரீ ராஜராஜேஷ்வரி உடனுறை சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், சமீபத்தில் நடைபெற்ற வள்ளி திருமணத்துக்கு, குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், மணமகள் வள்ளி சார்பில் சீர்வரிசைகளுடன் மேள தாளம் முழங்க ஊர்வலமாக சிவன் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சீர் வரிசை வழங்கியதே ஆகும்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 அன்று, புதுக்கோட்டை உட்பட தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க நமது மத்திய அரசு ஒப்பந்தம் கோரியது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்று இந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கவே, ஏப்ரல் 5ஆம் தேதி, மாண்புமிகு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களிடம் தமிழக பாஜக சார்பாக அவரைச் சந்தித்து கோரிக்கை வைத்தோம்.

இரண்டே நாட்களில் டெல்டா பகுதியில் விடப்பட்ட நிலக்கரி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. கடந்த காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு, மூன்று வருடம் கழித்து நாடகம் ஆடவில்லை. மக்கள் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பதை மட்டும் தான் எப்போதும் பாஜக சிந்திக்கும். விவசாயிகளுக்கு பக்கபலமாக என்றும் பாஜக துணை நிற்கும் என்பதற்கு இந்த நிலக்கரி ஒப்பந்தம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

புதுக்கோட்டை மாவட்டத்தில், 47,594 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலம் வீடு, 1,64,506 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,43,184 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,64,792 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் ,எரிவாயு இணைப்பு, 75,667 பேருக்கு, பிரதமரின் 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு, 1,28,995 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2556 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
அவர்கள் தலைமையிலான மத்திய அரசு செய்துள்ள நலத்திட்டங்கள் ஏராளம்.

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகுபதி, சிவ மெய்யநாதன் என இரு அமைச்சர்கள் இருந்தும், வேலைவாய்ப்புகள் வழங்க ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தின் சட்டம், ஊழல் தடுப்பு மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி. இவர் மேலேயே ஊழல் வழக்குகள் உள்ளன. துர்கா அம்மாவால் தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது என்று சொல்லும் இன்னொரு அமைச்சர் மெய்யநாதன், மக்களுக்கு என்ன சேவை செய்வார்? வரும் பாராளுமன்ற தேர்தலில், இந்த மக்கள் விரோத சுயநல திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும், பாஜக கூட்டணி வேட்பாளர்களையே தேர்ந்தெடுத்து வெற்றி பெறச் செய்வோம் எனத் தெரிவித்தார்.

Tags: bjpannamalai bjpdmk fails
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் மோசடிக் கட்சி: அகிலேஷ் கருத்துக்கு மத்திய அமைச்சர் வரவேற்பு!

Next Post

மேற்கு ஆசியா கடலில் அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்!

Related News

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies