இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் அதிகரித்து வருவதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் வசிப்பவர்களின் காப்புரிமை விண்ணப்பங்கள் 31.6% அதிகரித்துள்ளது, இது 11 ஆண்டு வளர்ச்சியைக் காட்டுகிறது என்று பிரதமர் டபிள்யூ.ஐ.பி.ஓ பதிவை இணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
The rise in patent applications in India demonstrate the rising innovative zeal of our youth and is a very positive sign for the times to come. https://t.co/EpEdEqlGrx
— Narendra Modi (@narendramodi) November 8, 2023
“இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்களின் அதிகரிப்பு நமது இளைஞர்களின் வளர்ந்து வரும் புதுமையான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது, மேலும் இது வரவிருக்கும் காலத்திற்கு மிகவும் சாதகமான அறிகுறியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.