திமுக அரசாண்டால் சட்டத்தையும் மனித உயிர் பாதுகாப்பையும் குப்பையிலேபோட்டு, எதிர்கட்சியினரை ஒடுக்குவதை மட்டும் காவல்துறை செய்யவேண்டும் என்பதே வழிகாட்டி நெறிமுறை என மாநிலப் பாஜக பிரச்சார பிரிவுத் தலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
”பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்!”- என்பார்கள்!
பேய்களின் ஆட்சியிலே பிணங்களை எப்படியேல்லாம் உண்ணலாம், எப்படியெல்லாம் உண்ணக்கூடாது என்பதற்காக சட்டங்களையும், வழிகாட்டி நெறி முறைகளையும் எழுதி வைத்திருப்பார்கள்!, என்பதுதான் இந்த சொல்லாடலின் பொருள்!
திமுக அரசாண்டால் சட்டத்தையும் மனித உயிர் பாதுகாப்பையும் குப்பையிலேபோட்டு, எதிர்கட்சியினரை ஒடுக்குவதை மட்டும் காவல்துறை செய்யவேண்டும் என்பதே வழிகாட்டி நெறிமுறை!
மாநகர பேருந்தின் படிக்கட்டுகளில் மட்டுமின்றி பேருந்தின் ஜன்னல் வழியே கூரையிலேக்கூட ஏறி நின்று ஆட்டம்போட்டு மின்கம்பியில் சிக்கி உயிரைவிடும் நிலையில், மாணவர்களை அனுமதித்து வாகனத்தை செலுத்திய பஸ் ஓட்டுனர் மீதும் நடத்துனர் மீதும் வழக்குகள் இல்லை!
மெமோ என்று சொல்லக்கூடிய துறை சார்ந்த நடவடிக்கையும் இல்லை!
ஆனால், ஓட்டுனரையும் நடத்துனரையும் எச்சரித்து; அவர்கள் இருவரும் கண்டுகொள்ளாததால், மாணவர்களை கண்டித்து கீழே இறக்கிவிட்ட சமூக அக்கரை கொண்ட பெண்மணிமீது 5 குற்றப்பிரிவுகளில் வழக்கு!
வழக்கு மட்டுமல்ல வீட்டுக்கு சென்று அதிரடியாக கைது!
மணவர்களின் மரணத்திற்கே வழிவகுத்த பஸ் ஓட்டுனர் நடத்துனர் மீது ஏன் நடவடிக்கை இல்லை என்றால், அவர்கள் திமுக யூனியன், அல்லது திமுக யூனியனுக்கு எதிர்பார்க்கப்படுகிறவர்கள்!
பணம் கொடுத்தாலும் அந்த ஓட்டு கிடைக்காமல் போய்விடக்கூடாதே! என்னும் எண்ணத்தில்தான் குற்றவாளிகளான அவர்கள் மீது நடவடிக்கை இல்லை!
மாணவர்களுக்கு நல்ல புத்தி சொல்லி விபத்திலிருந்து மாணவர்களை காப்பாற்றிய அந்த பெண்மணியை அழைத்து பாராட்டி பரிசு கொடுப்பதை தவிர்த்து, அந்த பெண்மணியை ஏன் கைது செய்தார்கள் என்றால், அந்த பெண்மணி பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்! கலை இலக்கியப்பிரிவின் மாநில செயலாளர்!
வழக்கறிஞர்! ரஞ்சனா நாச்சியார் என்பதுதான் அவர் பெயர்!
குன்றத்தூரில் இருந்து போரூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் கெருகம்பாக்கம் என்னும் இடத்தில்தான் இந்த சம்பவம் 3-4-2023 அன்று நடந்துள்ளது!
இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சகோதரி ரஞ்சனா பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயனம் செய்துக்கொண்டிருப்பதை கண்டு பதறியுள்ளார்!தனது இருசக்கர வாகனத்தை பஸ்சை முந்திக்கொண்டு ஓட்டிச்சென்று, டிறைவரிடம் பேசியுள்ளார்!
அவர் அலட்சியம் காட்டியுள்ளார்! நிறுத்தத்தில் பஸ் நிற்க்கும்போது நடத்துனரிடம் பேசியுள்ளார்! அவரும் அலட்சியப் படுத்தியுள்ளார்!
எனவே மாணவர்களிடம் பேசியுள்ளார்! மாணவர்களும் கண்டுகொள்ளாமல், மேலும் மேலும் கும்பலாக ஏறி, ஆட்டம்போட்டு, கூரையில் ஏறி சேட்டை செய்ததால், மாணவர்களை பிடித்து இழுத்து இறக்கி விட்டுள்ளார் அந்த பெண்மணி!
பின்பு அந்த பஸ் பாதுகாப்பான பயணத்தை தொடர்ந்துள்ளது! இறக்கி விடப்பட்ட மாணவர்கள் அடுத்தடுத்த பஸ்களில் பாதுகாப்பாக பயணப்பட்டுள்ளார்கள்!
இதை கவனித்துக்கொண்டிருந்த பொதுமக்கள், ரஞ்சனா நாச்சியாரின் துணிச்சலான சீர்திருத்த செயலை பாராட்டியுள்ளனர்!
பொதுமக்கள் ஓட்டுனரையும் நடத்துனரையும் திட்டி தீர்த்துள்ளனர்! ஆனால் காவல்துறையோ சாதனையாளரை கைதுசெய்து அவர்மீது 5 பிரிவுகளில் வழக்குகளை போட்டுள்ளது!
அந்த பெண்மணி திமுகவின் மகளிர் அணியாக இருந்திருந்தால், பாராட்டியிருப்பார், ஸ்டாலினிடம் அழைத்து சென்று அவர் பரிசு வழங்கியிருப்பார்!
பெண்மணி பாஜகவை சார்ந்தவர் ஆதலால் இந்த கொடுமை!
ஒரு தனியார் பஸ் நடத்துனராக பணியாற்றிய ஏ.வா. வேலு, எம்.எல்.ஏ ஆனவுடன், மருத்துவ கல்லூரிகளையும் பொறியியல் கல்லூரிகளையும் துவங்க எப்படி மூலதனம் கிடைத்தது?
கிடைத்தது புதையலா?, அல்லது கொள்ளையா? அரசு கஜானாவா? தலைமை குடும்ப பினாமியா?- என்றெல்லாம் விவாதிக்க வேண்டிய ஊடகங்கள்!
ஏ.வா. வேலுவுக்கு பரிதாப செய்திகளை வெளியிட்டுவிட்டு – அந்த பெண்மணி எப்படி அப்படி செயல்படலாம்? இது மாணவர் உரிமை மீறல் அல்லவா? அவர்களை காப்பாற்ற இவர்யார்? இவர் எப்படி சட்டத்தை கையில் எடுக்கலாம்?
இறங்கச்சொன்னது சரிதான், ஆனால் கடுஞ்சொல் பேசலாமா? பிடித்து இழுக்கலாமா? தவறு செய்யும் குழந்தையை கை நீட்டி அடிக்கலாமா? என்றெல்லாம் விவாதம் நடத்தினார்கள்!
தமிழக பத்திரிக்கைகளும் அப்படித்தான் எழுதின!
”அந்த ஓட்டுனரும் நடத்துனரும் இப்படி செய்யலாமா?” ”வழியில் பார்த்துக்கொண்டு நிற்கும் டிராப்பிக் போலீசார் வண்டியை நிறுத்தி மாணவர்களை இறக்கிவிட்டு, மாணவர்களை காப்பாற்றியிருக்கலாமே?”
”மாணவர்களின் பெற்றோர்மீது ஏன் வழக்கு தொடுக்கவில்லை?” ”அடுத்த பஸ்சில் போனால் என்ன?” ”டிறைவரும் கண்டக்டரும் பஸ்சை காவல் நிலையத்திற்கு ஓட்டியிருக்கவேண்டும்!”
”சொல்லி பார்த்தும் மாணவர்கள் கேட்கவில்லை என்றால் போலீசுக்கு போன் செய்திருக்கலாமே?”
என்றெல்லாம் யாரும் விவாதமும் நடத்தவில்லை பத்திரிக்கையில் எழுதவும் இல்லை!
“மாணவர்களின் பாதுகாப்பு” என்னும் இடத்தில் இந்த திமுக அரசு இல்லை என்பது மட்டுமல்ல, மாணவர்களின் மரணமோ எதுவோ எது வேண்டுமானாலும் நிகழட்டும், தலா ரூபாய் 2 லட்சம் வீதம் அரசு பணத்தை கொடுத்துவிடலாம்! ஆனால் ஓட்டுணர் நடத்துனர் மீது நடவடிக்கை எடுத்து ”ஓட்டை” இழக்கக்கூடாது என்னும் நிலைப்பாட்டில்தான் அரசு இருக்கிறது!
”சாலையில் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்தால் அவரை அப்புறப்படுத்தக்கூடாது, அப்படி செய்தால் குறைந்த அளவு ஐந்தாறு ஓட்டுகளையாவது இழக்க நேருமே, ஆக்கிரமித்தவனிடம் பணம் வாங்கிக்கொள்ளலாம், ஆணால் நடவடிக்கை கூடாது,
அதே வேளை அந்த ஆக்கிரமிப்பு ஒரு திருக்கோயிலாக இருந்தால் உடனே உடைத்து அப்புறப் படுத்திவிடவேண்டும்”
சர்ச், மசூதி என்றால் கண்டுக்கொள்ளக்கூடாது!- இதுதான் திமுகவின் மனநிலை!
”குடி குடியை கெடுக்கும்”, என்பதைப்போல, ”படிக்கட்டு பயணம் நொடியில் மரணம்” என எழுதி வைத்தால்மட்டும் போதும்! பொதுமக்கள் யாராவது தட்டிக்கேட்டால் கேட்டுவிட்டுப் போகட்டும் சும்மா இருந்துவிடலாம், ஆனால் பாஜகவினர் தட்டிக்கேட்டால் உடனே முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தூக்கிப்போட்டுவிட வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு!
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு இப்போது ”பாஜக ஜிரம்” பிடித்திருக்கிறது என்பதைத்தான் இந்த சம்பவம் நமக்கு விளக்குகிறது!
திமுக அரசு திருந்த வேண்டும், அல்லது இடையிலேக்கூட வீட்டுக்கு அனுப்பப்படவேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது! எனத் தெரிவித்துள்ளார்.