தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் வரும் 13 -ம் தேதி முதல் 15 -ம் தேதி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மாநகர பேருந்து இயக்கப்படுகிறது.
சென்னையில் வரும் 13 -ம் தேதி முதல் 15 -ம் தேதி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மாநகர பேருந்து இயக்கப்படுகிறது.
சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் 60 மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.
இவ்வாறு இயக்கப்படும் தீபாவளி சிறப்பு பேருந்துகளில், சொகுசு பேருந்து கட்டணம் வசூலிக்கப் போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், உரிய வழித்தட பெயர் பலகை சரிவரப் பொருத்தியும், பயணச் சீட்டுகளுடன் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அனைத்து மண்டலக் கிளை மேலாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.