சென்னையில் இரவு முதலே விட்டுவிட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மிக அதிக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பாதாளச் சாக்கடைகளிலிருந்து கழிவு நீர் வெளியேறி மிகவும் துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்த நிலையில், மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களைப் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.அதன்படி, 044 -25619206 அல்லது 044 -25619207 மற்றும் 044 – 25619208 ஆகிய எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும், 1913 இலவச உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 94454-77205 என்ற செல்போன் எண்ணில் வாட்ஸ் அப் வாயிலாகவும், சமூக வலைத்தளங்களில் ChennaiCorporation அல்லது ChennaiRains ஹேஷ்டேக் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்தது முதல் மழை காலங்களில் போர்க்கால பணி செய்யாமல், சுணங்கி உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இல்லாமல், மக்களின் குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் மழை – உதவி எண்கள் அறிவிப்பு