இந்திய அணி வீரர்கள் தங்களது மனைவிகளுடனும், சக வீரர்களுடனும், நண்பர்களுடனும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர். விதவிதமான ஆடைகள் அணிந்து கொண்டு இந்திய அணி வீரர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்த லீக் போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி தாங்கள் விளையாடிய 9 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது.
இந்நிலையில் இந்திய வீரர்கள் தீபாவளி அன்று தங்கள் குடும்பத்தோடு தீபாவளியைக் கொண்டியது மட்டுமில்லாமல் தங்களின் கிரிக்கெட் கிரிக்கெட் குடும்பத்தோடு ஒன்றாக இணைந்து அனைவரும் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
இதில் ரோகித் சர்மா தனது மனைவி ரித்திகாவுடனும், விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடனும் தீபாவளியை கொண்டாடினர். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கேஎல் ராகுல் தனது மனைவி ஆதியா ஷெட்டி மற்றும் கர்நாடக அணி வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பேச்சிலர்களான இஷான் கிஷன், சுப்மன் கில், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய அணியின் வேகப்பந்து பவுலிங் ஆயுதங்களாக செயல்படும் முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்திய கிரிக்கெட் குடும்பம் தன் குடும்பங்களோடு குடும்பமாக ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.