சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 75,
சுப்ரதா ராய் அவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட் பல்வேறு உடல்நல கோளாறுகளால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 12 -ஆம் தேதி அவருடைய உடல்நலம் மோசமடைந்தது. இதனையடுத்து கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நவம்பர் 14ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
1948 ஜூன் 10 ஆம் தேதி பீகாரில் உள்ள அராரியாவில் பிறந்த ராய், நிதி, ரியல் எஸ்டேட், ஊடகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, விடுதிகள், சில்லறை வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம் பதித்தவர்.
சுப்ரதாராயின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.