மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அங்கு இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்று பேசினார்.
அப்போது, கோவிட் சமயத்தில், மரணம் தாக்கும் போது, காங்கிரஸ் கட்சியின் எந்தத் தலைவரும் பொதுமக்களிடம் செல்லவில்லை என்றார். பாஜக தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று முகக்கவசம் மற்றும் சானிடைசர்களை விநியோகித்ததாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை (Ladli Behna Yojana) மூடுவோம் என அக்கட்சி தலைவர்கள் கூறியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் பிரச்சாரத்திற்கு வரும் போது அவர்களிடம் கேளுங்கள் என்றும் அவர் வாக்காளர்களை ஸ்மிருதி இரானி கேட்டுக்கொண்டார்.