தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்க முடிவு செய்ததற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசை நான் பாராட்டுகிறேன். இது ஒரு சிறந்த யோசனை மற்றும் சரியான திட்டம் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பாராட்டி இருக்கிறார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் நடவடிக்கைகளை அவ்வப்போது பாராட்டி வருகிறார். அந்த வகையில், தற்போது தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்க முடிவு செய்ததற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நாராயணமூர்த்தி கூறுகையில், “இந்தியர்களின் மனதில் கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளை புகுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்காக ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை விரிவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு வளர்ந்த நாடும் குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், வேலையின்மை விகிதத்தை குறைக்கவும் இதைத்தான் செய்கின்றன.
மேலும், புதுமையான யோசனைகளை உருவாக்க இளைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். இது வேலையின்மையைக் குறைக்கும். இந்த தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்க முடிவு செய்ததற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசை நான் பாராட்டுகிறேன்.
இது ஒரு சிறந்த யோசனை மற்றும் சரியான திட்டம். ஆனால், நான் சுட்டிக்காட்டியது போல், இது மேல்நிலைக் கல்வியில் மட்டுமல்ல, ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மட்டத்திலும் செயல்படுத்த வேண்டும்” என்றவரிடம், “தேசிய கல்விக் கொள்கையை சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த நாராயணமூர்த்தி, ‛‛புதிய யோசனைகளை தொடருவதில் சிலருக்கு சந்தேகம் இருக்கலாம். அவர்களும் இந்தியாவுக்கான சிறந்த எண்ணம் கொண்டவர்கள்தான். அவர்களும் தேச பக்தர்கள்தான். அத்தகையவர்களிடம் தரவு மற்றும் உண்மைகளை வழங்கி தேசிய கல்விக் கொள்கையின் மதிப்புகளை எடுத்து சொல்ல வேண்டும்” என்றார்.