ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நினைவடைந்த நிலையில் இன்று இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியின் வீரர்கள் :
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் , இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார்.
ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் :
மேத்யூ வேட் (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித், மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், ஜோஷ் இங்கிலிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜாம்பா, தன்வீர் சங்கா.