ரோஜ்கார் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார்.
நாடு முழுதும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க , ‘ரோஜ்கார் மேளா’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த மத்திய அரசு முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் ஆகியவற்றின் பல்வேறு துறைகளின் உதவியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் பல்வேறு கட்டங்களில் ‘ரோஜ்கார் மேளா’க்கள் நடைபெற்றன.
இதில் பிரதமர் மோடி துவக்கி வைத்து பல்லாயிரக்கணக்கானோருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி நடந்த வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதையடுத்து வரும் 30-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சி மூலம் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கி, பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.