தமிழகத்தை சுடுகாடாக மாற்றும் வேலையை திமுக செய்து வருகிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வள தளபதிவில்,
திமுக ஒரு அரசியல் கட்சி! அரசியலில் திமுகவின் கொள்கை என்னவென்றால் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பது தான்! ஊழல் செய்வதை பொதுமக்கள் கவனித்து விடக்கூடாது என்பதற்காக சில விஷயங்களை வெளியில் பேசுவார்கள்!
அப்படி அவர்கள் பேசக்கூடிய விஷயங்கள் தான் ஹிந்தி திணிப்பு ஹிந்து மத எதிர்ப்பு போன்றவை!
பொய்களை வாரி வீசி, தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஓட்டுக்கு லஞ்சமாக தந்து, மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்! ஆட்சிக்கு வந்ததும் திமுகவினர் மத்தியிலே ஒரு கடுமையான போட்டி நடக்கும்!
அது என்ன போட்டி என்றால் எனக்கு இந்தத் துறை வேண்டும் அந்தத் துறை வேண்டும் எண்ணம் போட்டிதான்! இந்த துறைகளை அவர்கள் என்ன அடிப்படையில் கேட்கிறார்கள் என்றால், எந்த துறையில் அதிகமாக சம்பாதிக்க முடியுமோ அந்த அடிப்படையில் தான் அதை கொடுங்கள் இதை கொடுங்கள் என்று கேட்பார்கள்!
துரைமுருகன் இப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருக்கிறார்! இவர் கருணாநிதி அவர்களுடைய ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்! அதிகமாக சம்பாதிக்க முடிந்தது பொதுப்பணித்துறை தான் என்பது தான் திமுகவினருடைய கருத்து!
பொதுப்பணித்துறை அமைச்சராகதான் நான் இருந்தேன் எனக்கு அந்த பொறுப்பு தான் தர வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் அவர்களிடம் துரைமுருகன் அவர்கள் வாதிட்டதாக சொல்லப்படுகிறது! ஆனால் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் நமக்கு சரிப்பட்டு வர மாட்டார் சரியாக பங்கு தர மாட்டார் என கருதிய காரணத்தினால் பொதுப்பணித்துறை அவருக்கு தரப்படவில்லை!
துரைமுருகன் அவர்களுக்கு நீர்வளத்துறை கிடைத்தது! சரி கிடைத்ததை வைத்து சாதித்து காட்டுகிறேன் என்று மற்ற திமுகவினரிடம் சவால் விட்டதாக சொல்லப்படுகிறது!
தனது கைவரிசையை காட்ட துவங்கினார் துரைமுருகன்! முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் இருக்கிறது! அந்த அணையை பராமரித்து தண்ணீர் திறந்து விடுவது போன்ற பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும் உரிமையும் தமிழக அரசிடம் இருக்கிறது! ஆனால் துரைமுருகன் அவர்கள் அந்த பொறுப்பினை கேரளா அதிகாரிகளிடம் வழங்கி விட்டார்!
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வாதாடி யும் கிடைக்காத இந்த அதிகாரம் தமிழக அமைச்சர் துரைமுருகன் மூலம் எளிதாக கிடைத்தமைக்கு கேரளாவில் இருந்து என்ன கைமாறு அமைச்சருக்கு செய்யப்பட்டது என்கின்ற தகவல் இதுவரைக்கும் வெளிவரவில்லை! இந்த அதிகார கைமாற்றம் பத்திரிகைகளில் வெளிவந்ததும் பரபரப்பாக பேசப்பட்டது! திரை மறைவில் நடந்தது வெளிச்சத்துக்கு வந்து விடுமோ என அச்சமடைந்த அமைச்சர் துரைமுருகன் ஓடிச்சென்று அந்த சாவியை கையில் வாங்கிக் கொண்டார்!
துரைமுருகன் ஒரு வருடத்தில் மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சம்பாதித்திருப்பதாக குடியாத்தம் குமரன் என்று சொல்லக்கூடிய ஒரு திமுகவினரே குற்றம் சாட்டி இருக்கிறார்! சரி திமுகவினர் ஏன் குற்றம் சாட்ட வேண்டும்? ஏதாவது பங்கு தகராறாக இருக்கக்கூடும்!
அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மணல் விற்றதாக அரசுக்கு தந்த கணக்கு ஓராண்டில் 18 கோடி தான்! மற்ற ஆட்சிகளின் போது சராசரியாக 250 கோடி கணக்கு காட்டுவார்கள் என்று சொல்லப்படுகிறது! ஆனால் உண்மையில் அமைச்சர் விற்பனை செய்திருப்பது 60 ஆயிரம் கோடி என்று சொல்லப்படுகிறது!
இந்த விவகாரத்தில் பணம் மட்டும் பிரச்சனை இல்லை, ஆற்று மணலை அதிகமாக அள்ளி ஆற்றை ஆழப்படுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை இறங்கச் செய்து, விவசாய நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றும் செயலாகவும் இந்த செயல் அமைகிறது!
இப்படி செய்வதால் தஞ்சை தரணி உட்பட தமிழகம் முழுமையும் நெல் உற்பத்தி குறைகிறது! சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 6 லட்சம் டன் நெல்லின் கொள்முதல் குறைந்து இருக்கிறது தமிழகத்தை சுடுகாடாக மாற்றும் வேலையை திமுக செய்து வருகிறது
நீர்வளத்துறை அமைச்சர் என்றால், நதிகளிலே எங்கெல்லாம் உடைப்பு இருக்கிறது என பார்த்து அதை சரி செய்ய வேண்டும் ஏரிகளை ஆளப்படுத்த வேண்டும் கர்நாடகத்தில் தற்போது இவர்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடப்பதால் அங்கிருந்து எளிதாக காவிரியில் தண்ணீர் திறந்து விட வழிவகைகளை செய்ய வேண்டும்! ஆனால் துரைமுருகன் அவர்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு ஆற்று மணலை முறைகேடாக வாரிவிற்று சம்பாதிக்க துவங்கி விட்டதாக சொல்லப்படுகிறது!
ஆற்றிலே ஆறடி ஆழத்துக்கு மேலாக மணல் எடுக்கக் கூடாது என்பது சட்டம்! ஆனால் இவர் 15 அடி 20 அடி எடுத்து இருக்கிறார்! தமிழகத்தில் இருக்கக்கூடிய வீடுகள் அனைத்தையும் கட்டுமானங்கள் அனைத்தையும் உடைத்து தள்ளிவிட்டு மீண்டும் கட்டினால் என்ன மணல் தேவைப்படுமோ அதை விட அதிகமான மணலை எடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது!
வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறதாம்! வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை! பொதுவாக உலக நாடுகள் தங்களுடைய இயற்கை வளமாகிய ஆறுகளை பாழ்படுத்த மாட்டார்கள்! அங்கிருந்து மணல் எடுக்க மாட்டார்கள்! வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானால் அதை வாங்கி கொள்வார்கள்!
ஒரு ஏக்கராவில் பதினெட்டாயிரம் டன் மணல் எடுக்கலாம் ஆனால் அமைச்சர் துறைமுகம் அவர்கள் 55,000 டன் மணல் எடுத்திருக்கிறார்கள்.
குடியாத்தம் குமரன் அவர்கள் இப்போது பகிரங்கமாக புகார் கூறுவதற்கு முன்னமே அமலாக்கத்துறைக்கு இந்த குற்றச்சாட்டு சென்றிருக்கிறது! அவர்கள் சேட்டிலைட் மூலமாக ஆய்வு நடத்தியதாக சொல்லப்படுகிறது!
காவிரியின் கொள்ளிடம் ஆற்றில் 12 இடங்களிலே 10 கிலோமீட்டர் முதல் 15 கிலோமீட்டர் தொலைவு வரைக்கும் நீளமாக 15 அடி ஆழத்திலிருந்து 20 அடி ஆழம் வரைக்கும் மணல் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது!
தமிழகத்தின் இதர ஆறுகளிலும் 17 இடங்களிலே இத்தகைய கொள்ளை நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது! இந்த தகவல்களை சேட்டிலைட் மூலம் அறிந்து கொண்ட அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் மணல் கொள்ளையர்களாகவும் அமைச்சர் துரைமுருகன் அவர்களின் நண்பர்களாகவும் அறியப்பட்ட புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தனம், மற்றும் கரிகாலன் ஆகியவர்களின் அலுவலகங்களில் ஆய்வுகளை அமலாக்க துறையும் வருமான வரித்துறையும் நடத்தியுள்ளது!
ஆய்வின்போது 10 மாவட்ட ஆட்சியருக்கு கூட தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது! எனவே வருமான வரித்துறையும் அமலாக்கத் துறையும் அந்த பத்து மாவட்ட ஆட்சியர்களை விசாரிப்பதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்!
மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது தவறு எனச் சொல்லி மு க ஸ்டாலின் இந்த மணல் கொள்ளை விவகாரத்தில் உள்ளே நுழைகிறார்! தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!
“நடந்தது குற்றம், நான் அமைச்சர் துரைமுருகனை பணி நீக்கம் செய்கிறேன்!” என்று உத்தரவிட வேண்டிய முதலமைச்சர் குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் செயல்படுகிறார்!
ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கக்கூடிய அமலாக்க துறையின் செயல்பாடுகளின் குறுக்கே நுழைந்து அப்படி செய்யாதீர்கள் என்று சொல்லக்கூடியவர்களும் ஊழல்வாதிகள் தானே! அந்த வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்!
திமுகவை பொருத்தமட்டில் பணம் சம்பாதிப்பது தான் அவர்களின் கொள்கை அந்தக் கொள்கைக்கு விலக்காக மு.க. ஸ்டாலின் இருந்திட வாய்ப்பே இல்லை என்பதை தான் அவருடைய செயல்பாடுகள் காட்டுகின்றன! அமலாக்க துறையினருக்கு மெத்த பணிவோடு நாம் ஒன்றினை சொல்லிக்கொள்ள முயற்சிக்கிறோம் , ராணி தேனீயை நகர்த்தாமல் தேன் கூட்டை நகர்த்த இயலாது! வேலைக்கார தேனீக்களாக செயல்படும் திமுக அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் ராணித்தேனியாக விளங்கக்கூடிய மு.க. ஸ்டாலின் தான்!
குற்றத்தை ஒழிக்கும் அமலாக்க துறையின் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தில் தடையானை பெறவிரும்பும் முதலமைச்சருக்கு சம்மன் அனுப்பி அவரையும் விசாரிக்க வேண்டும் என்று அமலாக்க துறையை பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்! எனத் தெரிவித்துள்ளார்.