சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர்: திராவிட மாடல் ஆட்சியின் அவலம்!
Sep 13, 2026, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர்: திராவிட மாடல் ஆட்சியின் அவலம்!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 11:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் ஒரு நாள் பெய்த கனமழைக்கே முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, சென்னையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் குறிப்பாக, கோடம்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, போரூர், தி.நகர், எழும்பூர், வேப்பேரி, மயிலாப்பூர், இராயப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான, மதுரவாயல், வானகரம், திருவேற்காடு, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட இடங்களிலும் விட்டுவிட்டு கனமழை பெய்தது.

சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, 100-அடி சாலை, போரூர் புறவழிச்சாலை, அண்ணா நகர் நிழற்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். குண்டும், குழியுமான சாலைகளில் குளம் போல், தண்ணீர் தேங்கி நின்றதால், இருசக்கர வாகனங்கள் பழுதாகி நின்றன. மேலும், வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: dmk failschennai heavy rainfall
Share
Tweet
SendShare
Previous Post

அமலாக்கத்துறை மு.க. ஸ்டாலினை விசாரிக்க வேண்டும்!

Next Post

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு – அதானி பராக்… பராக்..!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies