விராட் கோலியின் டெஸ்ட் போட்டிகளில் 29 சதம் அடித்த சாதனையை சமன் செய்தார் கேன் வில்லியம்சன்.
நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்திற்கு இடையேயான டெஸ்ட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது.
அதன் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்க்ஸில் 310 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக ரன் குவிக்காத போதும் கேன் வில்லியம்சன் தனி ஆளாக நின்று ரன்களை சேர்த்து சதம் அடித்து சாதனையை செய்துள்ளார்.
இந்தப் போட்டியில் அவர் அடித்த 29 வது சதம் மூலம் தொடர்ந்து நான்கு போட்டிகளில் சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும், அவர் தொடர்ந்து மூன்று டெஸ்ட் இன்னிங்ஸில் சதம் அடித்து இருக்கிறார். அதன் மூலம் நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து மூன்று டெஸ்ட் இன்னிங்ஸில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இதற்கு முன் நியூசிலாந்து வீரர் ஆண்ட்ரூ ஜோன்ஸ் தொடர்ந்து மூன்று டெஸ்ட் இன்னிங்ஸில் சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் இந்திய வீரர் விராட் கோலியின் டெஸ்ட் போட்டிகளில் 29 சதம் அடித்த சாதனையை சமன் செய்துள்ளார் கேன் வில்லியம்சன்.
அதிலும் விராட் கோலியை விட விரைவாக 29 டெஸ்ட் சதம் அடித்து அவரது சாதனையை முறியடித்து உள்ளார்.