தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இளம் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இடம் பெற்றுள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
அதற்கான வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதில் இளம் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம் பெற்றுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தனது மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகளில் 145 ரன்களை குவித்தார்.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய சாய் சுதர்சன் 8 போட்டிகளில் 362 ரன்கள் குவித்தார்.
மேலும் இந்த தொடரில் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடினால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.