சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில், தாம்பரம் இரயில் நிலையத்தில் இன்று தண்டவாளப் பராமரிப்பு பணிக்காக, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே, இரவு நேர மின்சார இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறியிருப்பதாவது, சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில், தாம்பரம் இரயில் நிலையத்தில் இன்று தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால், சென்னை கடற்கரையில் இருந்து, இன்று இரவு 11:59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார இரயில் ரத்து செய்யப்படுகிறது. மேலும், மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11:40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார இரயில் ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.